புதிதாக ஓர் அங்குல நிலம்கூட இந்த அரசு விடுவிக்கவில்லை! – 24ஆவது வாரமாகத் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்.

https://we.tl/t-DqOtYg2i27tnYxnE

தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை 24ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.

பல ஆண்டுகளாகத் தமது காணிகளை இழந்து, அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், தற்போதைய அரசும் தமது எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி வருகின்றது என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஆட்சிக் காலங்களிலேயே விடுவிக்கப்பட்ட காணிகளை மீண்டும் பெருமளவில் விடுவிப்பதாகத் தற்போதைய அரசு கூறி வருகின்றது என்றும், ஆனால் இதுவரை புதிதாக குறிப்பிடத்தக்க அளவிலான காணி எதுவும் விடுவிக்கப்படவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாதத்திலாவது தமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்குமா அல்லது வழமைபோன்று ஏமாற்றம்தான் மிஞ்சுமா என்ற கேள்வியை மயிலிட்டி மக்கள் எழுப்பியுள்ளனர்.

தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்கான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், இன்னும் ஓரிரு வாரங்களில் மயிலிட்டி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய அளவிலான போராட்டமொன்றை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர்.

தமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை எத்தகைய சூழ்நிலையிலும் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் மக்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.