எரிபொருள் விலை உயர்வு: விமான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியது இண்டிகோ!

டெல்லி,

எரிபொருள் கட்டணம் அதிகரித்துள்ளதால் டிக்கெட் விலையை உயர்த்துவதாக இண்டிகோ அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் இண்டிகோ. உள்நாடு, வெளிநாடுகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான விமானங்களை இண்டிகோ விமான நிறுவனம் இயக்கி வருகிறது.

டிக்கெட் விலையை உயர்த்தும் இண்டிகோ
இந்நிலையில், ஜெட் விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் எரிபொருள் கட்டணத்தை கூடுதலாக வசூலிக்க இண்டிகோ நிறுவனம் முடிவெத்துள்ளது. இதன் காரணாக இண்டிகோ விமானத்தில் உள்நாடு, வெளிநாட்டு பயண டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, உள்நாட்டில் இயக்கப்படும் இண்டிகோ விமானங்களில் எரிபொருள் கட்டணம் கிலோ மீட்டர் வாரியாக குறைந்தபட்சம் ரூ. 375 முதல் அதிகபட்சம் ரூ. 1,300 வரை உயர்த்தப்பட உள்ளது. அதேபோல், வெளிநாட்டு பயணங்களில் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் அதிகபட்சம் ரூ. 10,000 வரை எரிபொருள் கட்டணம் உயர்த்தப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எரிபொருள் கட்டண உயர்வு டிக்கெட் விலையில் சேர்க்கப்பட உள்ளது. இதனால் பயணிகள் டிக்கெட் விலையை இண்டிகோ உயர்த்த உள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.