உச்ச நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்

புதுடெல்லி: உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையி​லான 5 மூத்த நீதிப​தி​களைக் கொண்ட கொலீஜி​யம் குழு கூட்டம் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. கூட்​டத்​தில், 3 உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​களை உச்ச நீதி​மன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்​திய அரசுக்​குப் பரிந்​துரை செய்யப்பட்டது.

குஜ​ராத் உயா் நீதி​மன்ற தலைமை நீதிபதி சுனிதா அகா்​வால் டெல்லி உயா் நீதி​மன்ற தலைமை நீதிபதி தேவேந்​திர குமாா் உபாத்​யாய, தெலங்​கானா உயா் நீதி​மன்ற தலைமை நீதிபதி அபரேஷ் குமாா் சிங் ஆகியோரின் பெயா்கள் உச்ச நீதி​மன்ற நீதிபதி பதவிக்கு பரிந்​துரைக்​கப்​பட்​டன. கொலீஜி​யத்​தின் இந்த பரிந்​துரையை ஏற்​று, உச்ச நீதி​மன்​றத்​துக்கு 3 புதிய நீதிப​தி​களை நியமிக்க குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஒப்​புதல் வழங்கினார்.

இதற்கான அதி​காரப்​பூர்வ அறி​விப்பை மத்திய அரசு நேற்று வெளி​யிட்​டது. நீதித்​துறை வெளி​யிட்ட அறி​விப்​பின்​படி, புதி​தாக நியமிக்​கப்​பட்ட 3 நீதிப​தி​களும் விரை​வில் பதவி​யேற்​றுக் கொள்வார்​கள். அவர்​களுக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் பதவிப் பிர​மாணம் செய்து வைப்​பார். தற்​போது உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிப​தி​கள் பணி​யாற்​றும் நிலை​யில், புதிய நீதிப​தி​கள் பதவி​யேற்​றவுடன் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 37 ஆக உயரும்​.

Leave A Reply

Your email address will not be published.