கோர விபத்தில் பெண் மரணம்! – தென்மராட்சியில் சோகம்.

யாழ்ப்பாணம் – தென்மராட்சிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மீசாலை – புத்தூர் சந்திப் பகுதியில் டிரக்கரும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுக்கொன்று மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற அபிவிருத்தி உத்தியோகத்தரான சோபிதா (வயது 36) என்பவரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.