அனுராதபுரத்தில் கோர விபத்து! மரத்துடன் மோதிய தனியார் பஸ்!! – 14 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்..
அனுராதபுரம் மாவட்டம், திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியில் தனியார் பஸ் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் திறப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாரம்மல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு மீண்டும் அனுராதபுரத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே நிக்கவரெட்டியவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த இந்த பஸ் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 12 ஆண்களும் 2 பெண்களும் உட்பட 14 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக்கலக்கமே (தூக்கக் கலக்கம்) இந்த விபட்டுக்குக் காரணம் என்பது பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
