ஷிராந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் முதல் பெண்மணிக்கு எதிரான நிதி மோசடி வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு இதய அறுவைச் சிகிச்சை ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மற்றும் மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.