யோஷித மீதான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகோடா ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள இவ்வழக்கின் விசாரணைக்காக யோஷித ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இரு தரப்புச் சமர்ப்பணங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, வழக்கின் மேலதிக நடவடிக்கைகளை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார். அதற்கமைய, இந்த வழக்கு எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.