இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் 22 வயது இளைஞர் வெட்டிக்கொலை!

மொனராகலை மாவட்டம், மதுள்ளை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மதுள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இந்தக் கொலைச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு முற்றவே, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.