ரயிலில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டால் 6 மாதம் சிறை: தெற்கு ரயில்வே கடுமையான எச்சரிக்கை

ரயில் பயணத்தின்போது அதிக சத்தத்துடன் பாடல்களைக் கேட்பது, செல்போனில் சத்தமாகப் பேசுவது உள்ளிட்ட செயல்களால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

ரயில்களில் சிலர் செல்போனில் சத்தமாகப் பேசுவதும், அதிக சத்தத்துடன் பாடல்கள் மற்றும் வீடியோக்களைக் கேட்பதும் மற்ற பயணிகளுக்குத் தொந்தரவாக அமைகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும்போது இதுபோன்ற செயல்கள் அவர்களின் தூக்கத்தைப் பாதிக்கின்றன.

ஆறு மாதங்கள் வரை சிறை
இதைக் கருத்தில் கொண்டு, ரயில் பயணத்தின்போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், விதிமீறலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் பிற பயணிகளின் வசதியையும், அமைதியையும் கருத்தில் கொண்டு நடந்துகொள்ள வேண்டும்.

செல்போன் பயன்படுத்தும்போதும், பாடல்கள் கேட்கும்போதும் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.