பொதுத் தேர்தலின் பின்னர் மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படும்

எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம்திகதி பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருநாகலில் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில்

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாக மக்கள் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர்.

மாகாணசபை தேர்தல்களில் வெற்றிபெறுவது குறித்த நம்பிக்கையின்மை காரணமாக முன்னைய அரசாங்கம் அந்த தேர்தலை நடத்தவில்லை.

எனவே பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தவுடன் விரைவில் மாகாணசபைகளுக்கான தேர்தல் இடம்பெறும்.

மாகாணசபைகள் தேர்தலை நீண்ட காலத்திற்கு ஒத்திவைத்தமை நியாயமற்ற செயல் என தெரிவித்துள்ள பிரதமர் அவ்வாறு ஒத்திவைத்தமையை கண்டித்துள்ளார்.

Comments are closed.