ஜனாதிபதியும் அரசும் தலையிடாமல் இருந்திருந்தால் அனோஜனுக்கு மரணதண்டனை நிறைவேறியிருக்கும்.
சிவராசா அனோஜன் விவகாரத்தில் ஜனாதிபதியும் அரசும் தலையிடாமல் இருந்திருந்தால், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“சிவராசா அனோஜனின் இந்த விவகாரம் தொடர்பில் சவூதி உயர்நீதிமன்றத்தின் ஊடாகவே சட்ட ரீதியான தீர்வைக் காண முடியும் என ஜனாதிபதி மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் வெற்றிபெற்றுள்ளோம்.” – என்றார்.
