கேரள காவல்துறையில் 30% மகளிர் பிரதிநிதித்துவம்: மாநில அரசு முடிவு

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரத்தில் போலீஸ் குற்றப்புலனாய்வு பிரிவை மாநில உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநில காவல்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 30 சதவீதமாக அதிகரிக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

நியமன விகிதம்
அதன்படி மாநிலத்தில் எதிர்காலத்தில் போலீசில் நடைபெறும் பணி நியமனத்தில் ஆண், பெண் நியமன விகிதம் 7:3 என்ற விகிதத்தில் இருக்கும் என அவர் கூறினார்.

பெண் இன்ஸ்பெக்டர்கள்
போலீசில் குற்றங்களை கண்டறிதல், போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பெண்கள் சிறந்து விளங்குவதாக கூறிய சென்னிதலா, தற்போது மாநிலத்தின் 63 காவல் நிலையங்களில் பெண்கள், இன்ஸ்பெக்டர்களாக பதவி வகித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.