காலநிலைக்கு சீர்ரமைவான நீர்பாசன விவசாயசெய்கை தொடர்பான கலந்துரையாடல்.

காலநிலைக்கு சீர்ரமைவான நீர்பாசன விவசாயசெய்கையை விரிவுபடுத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று (27) மாவட்ட செயலகத்தில் காலநிலைக்கு சீர்ரமைவான நீர்பாசன விவசாயசெய்கை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துறையாடலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் ஏற்பாடுசெய்திருந்தார். இக்கூட்டத்தில் குறிப்பாக மாவட்டத்தில் 20 குளங்களை புனரமைப்பு செய்வதுடன் அதுதொடர்பான பாதைகள் வாய்கால்கள் கால்வாய்கள் என்பனவற்றை புனரமைப்பு செய்து வரட்சியினால் பாதிக்கப்படுகின்ற விவசாய மக்களின் பொருளாதாரத்தினை மேன்படுத்தி மக்களை பாதுகாக்கும் செயல்திட்டமாகவே இவ்செயல்திட்டம் அமையவுள்ளது.

இச்செயல்த்திட்டமானது இலங்கையில் ஆறு மாகாணங்களில் 11 மாவட்டத்தில் 44 கமநல சேவைகள் நிலையப்பிரிவுகளில் 23800 மில்லியன் நிதியில் திட்டம் முன்னெடுக்கப்படவள்ளது அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலைய பிரிவில் 15 குளங்களும் கறடியநாறு கமநல சேவைகள் நிலைய பிரிவில் 17 குளங்களும் ஆயித்தியமலை கமநல சேவைகள் நிலைய பிரிவில் 03 குளங்களும் மெத்தம் 34 குளங்கள் அபிவிருத்தி செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டபோதிலும் காலதாமதம் ஏற்பட்டு வருவது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆராய்ந்து துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த்இ நீர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி சம்மந்தப்பட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.