பிக் பாஸ் ஆட்டத்தையே புரட்டி போட்ட அனிதா : சொதப்பிய நிஷா

பிக் பாஸ் சீசன் 4ல் ஒரு போட்டியாளராக களமிறங்கியவர் தான் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்.

இவர் இடைவெளியில்லாமல் நீண்ட வசனங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசி, ரசிகர்களை மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களுக்கும் எரிச்சலூட்டிக் கொண்டிருந்தார்.

அதன் பின் தன்னுடைய தவறை புரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டிருந்த அனிதா சம்பத் தான், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளார்.

ஏனென்றால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் சம்யுக்தா சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்படவில்லை.

ஏனென்றால் ஒரு சில தினங்களுக்கு முன்பு நாமினேட் செய்யப்பட்டவர் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பிக் பாஸ் டோக்கன் ஒன்றைக் கொடுத்து, அந்த டோக்கனை பெரும் நாமினேட் லிஸ்டில் இருக்கும் நபர், எளிதாக தப்பித்துக்கொள்ளலாம்.

அதே நேரத்தில் தனக்கு பதில் நாமினேட் ஆகாத ஒருவரை நாமினேட் செய்யும் வாய்ப்பைப் பெறுவர்.

எனவே இந்த டாஸ்கின் போது அனிதா நிஷாவிடம் சாதுர்யமாகப் பேசி அந்த டோக்கனை பெற்று, தனக்கு பதில் சம்யுக்தாவை நாமினேஷன் ப்ராசசில் சிக்க வைத்தார்.

அதன் காரணமாகவே சம்யுத்தா இந்த வாரம் மக்களிடம் குறைவான ஓட்டை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படயுள்ளார்.

எனவே ‘அனிதாதான் பிக்பாஸ் ஆட்டத்தையே மாற்றி அமைத்துள்ளார்’ என்று சமூக வலைதளங்களில் பிக்பாஸ் ரசிகர்கள் அனிதாவிற்கு பாராட்டுக்களை குவிக்கின்றனர்.

நிஷா விளையாட்டை  விளையாட்டாக பார்க்கமாமல் விளையாடுவதும் நாளை விபரீதமாகலாம்.

 

Leave A Reply

Your email address will not be published.