கிளிநொச்சியில் பயன்தரு மரங்கள் முறிந்து வீடுகளும் சேதம்.

கிளிநொச்சியில் மழையின் தாக்கம்.

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கோணாவில் மற்றும் ஸ்கந்தபுரம் பகுதிகளில் மழையுடனான பலத்த காற்றினால் பயன்தரு மரங்கள் முறிந்ததுடன் வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 2 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பயன்தரும் 10க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் 5 க்கு மேற்பட்ட தேக்கு மரங்கள் அழிவடைந்துள்ளன.

இதேபோன்று விவசாய வயல் நிலங்களும் பாதிப்பினை சந்தித்துள்ளன.

குறித்த பாதிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்டச்செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு நேரில் சென்று அவதானம் செலுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.