பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன்… என்ன காரணம் தெரியுமா?

டெல்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.

டெல்லியில் துவாரகா பகுதியில் உள்ள பப்ளிக் பள்ளி, மயூர் விஹாரில் உள்ள மதர் மேரி உள்ளிட்ட 3 பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மூன்று பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.

டெல்லி மட்டுமின்றி நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அனைத்து பள்ளிகளுக்கும் மின்னஞ்சலில் ஒரே விதமாக மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், டெல்லி பப்ளிக் பள்ளியில் பயின்று வரும் 16 வயது மாணவர் ஒருவரே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்துள்ளது. விசாரணையில் விளையாட்டுத்தனமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அந்த மாணவன் தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள்

லக்னோ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

ஐசியூவில் செல்போன், நகைகள் பயன்படுத்தக் கூடாது: மத்திய அரசு உத்தரவு

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

2007க்கு முன் பிறந்தவர்கள் பெயர்கள் , வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா?

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூபா 1700 வரை அதிகரிக்கப்படும் – ரணில்.

குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது சட்டப்படி குற்றம் : மீறுவோர் தண்டிக்கப்படுவர்.

சிமெண்ட் விலை குறைக்கிறது – புதிய விலை.

தலவாக்கலையில் திகாவின் மே தினக் கூட்டம்! – சஜித்தும் பங்கேற்பு.

5 வயது மகளைக் கொன்றவருக்கு 34½ ஆண்டுகள் சிறை, 12 பிரம்படி.

சடங்குகளோடு செய்யாத திருமணம் செல்லாதா? உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

Leave A Reply

Your email address will not be published.