வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் 30 நிமிடங்கள் போக்குவரத்து தடை.
30 நிமிடங்கள் போக்குவரத்து தடை
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணீறூற்று – நெடுங்கேணி பிரதான வீதியில் களிக்காட்டுப் பகுதியில் வீதிக்கு குறுக்காக மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து இன்று சுமார் அரை மணி நேரமாக தடைப்பட்டிருந்தது
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலையில் காற்றும் வீசி வருகின்றது. இந்தநிலையில் குறித்த வீதியோரத்தில் நின்ற பாரிய மரமொன்று வீதிக்கு குறுக்காக சரிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து அந்த வீதியால் வந்த வாகனச் சாரதிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து குறித்த மரத்தை அகற்றினர். அரை மணி நேரத்தின் பின்னர் வீதியினூடாக போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது



