புரவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

சென்னை: புரவி புயல் கரையை கடக்கவுள்ளதால் தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறவிக்கப்பட்டுள்ளது. புரவி புயல் இலங்கை திருகோணமலை- பருத்தித் துறை இடையே முல்லைத்தீவு அருகே கரையை கடந்தது. இதையடுத்து இன்று நாள் முதல் மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்தது. இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பன்- கன்னியாகுமரி இடையே பாம்பன் அருகே கரையை கடக்கும். தற்போது ராமநாதபுரத்தில் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது, திருத்துறைப்பூண்டியில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் இன்று இரவோ அல்லது நாளை அதிகாலையோ புயல் கரையை கடக்கும் என்பதால் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயல் இன்று மன்னார் வளைகுடா பகுதியில் பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் நாளை அதிகாலை பாம்பன்- கன்னியாகுமரி இடையே தென் தமிழக கடற்கரையை கடக்கக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு புயல் கரையை கடக்கும் போது பெரும் மழைக்கும் புயல் காற்றுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.