மாவீரர் தின நிகழ்வையும், “கார்திகை தீப” இந்து பண்டிகையையும் குழப்பிக் கொள்ளாதீர்கள் : மனோ

“இந்து கலாச்சார திணைக்களத்தில் இந்து பண்டிகைகள் பற்றிய நாட்காட்டியை பெற்றுக்கொண்டு, செயற்படும்படி, வடக்கு, கிழக்கு மாகாண DIGகளுக்கும், யாழ், வன்னி பிராந்திய ராணுவ கட்டளை தளபதிகளுக்கும் கூறுங்கள்.” என நாடாளுமன்றத்தில் இருந்த பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகரவையும், பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்சவையும் , முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அறிவுறித்தினார்.

“கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளையும், நவம்பர் 29 பெளர்ணமியன்று நடந்த “கார்திகை தீப” இந்து பண்டிகையையும், பொலிஸும், இராணுவமும் போட்டு குழப்பியடித்துள்ளன.”

“இராணுவத்தினரும், பொலிசாரும், கார்த்திகை தீப விளக்கேற்றல்களை தடை செய்துள்ளார்கள். இத்தகைய நடைமுறைகள் மூலம் இந்நாட்டில் பெளத்தர்கள், இந்துகள் மத்தியில் ஒருபோதும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது.”

“இங்கே சபையில் வந்து, கார்த்திகை தீப நிகழ்வுகளை பாதுகாப்பு பிரிவினர் குழப்பும் சம்பவங்கள் நடைபெறவில்லை என சொல்ல வேண்டாம். இவை நடந்துள்ளன. இதற்கு எதிராக பொலிஸ் புகார்கூட செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி இங்கு வன்னி எம்பி சார்ல்ஸ் நிர்மலநாதன் சொல்வது முற்றிலும் உண்மை”

“கடைசியாக எமது ஆட்சியில் எனது பொறுப்பிலேயே இந்து சமய துறை இருந்தது. ஆகவே மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள். அவை பற்றி இந்த சபையில் பேச வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது” என மனோ கணேசன் பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டினார்.

https://www.facebook.com/mano.ganesan.3/posts/10214410881585019

Leave A Reply

Your email address will not be published.