யு.எஸ். பாதுகாப்பு செயலாளருக்கான பிடனின் தேர்வு கருப்பு இனத்தைச் சேர்ந்தவர்

ஓய்வுபெற்ற யு.எஸ். இராணுவ ஜெனரலான லாயிட் ஆஸ்டின் அடுத்த யு.எஸ். பாதுகாப்பு செயலாளராக ஆக உள்ளதாக கூறப்படுகிறது. பிடென் அவ்வாறு செய்தால், அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக ஆன முதல் கறுப்பின நபர் ஆஸ்டின் ஆவார்.

இப்போது 67 வயதான லாயிட் ஆஸ்டின், பராக் ஒபாமாவின் ஜனாதிபதி காலத்தில் அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதியாக பணியாற்றினார்.

லாயிட் ஆஸ்டினை பாதுகாப்பு செயலாளராக நியமிக்க, பிடென் அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதலைப் பெற வேண்டும். லாயிட் ஆஸ்டின் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று இன்னும் ஏழு ஆண்டுகள் முழுமை ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.