ஃபைசர் – பயோடெக் முதல் தடுப்பூசி 90 வயது பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது

ஃபைசர் – பயோடெக் தடுப்பூசியை இன்று முதல் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய இங்கிலாந்து நடவடிக்கை எடுத்துள்ளது, அதன் முதல் தடுப்பூசி 90 வயது பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மார்கரெட் கீனன் என்ற பெண், அடுத்த வாரம் 91 வயதாகும் என்றும், தடுப்பூசியை பெற்ற அவர் இது அவரது பிறந்தநாளுக்கு முன்பு கிடைத்த ஒரு நல்ல பரிசாக இருக்கக்கூடும் என்றும் கூறினார்.

“கோவிட் -19 வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட முதல் நபர் என்ற பெருமை எனக்கு உண்டு. இது எனக்கு கிடைத்த சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்க விரும்புகிறேன். ஆண்டின் பெரும்பகுதி தனியாக இருந்த பிறகு, எனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் புத்தாண்டைக் கழிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கும், ”என்று கீனன் மேலும் கூறினார்.

தன்னை கவனித்துக்கொண்டதற்காக பிரிட்டிஷ் என்.எச்.எஸ் ஊழியர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென கற்பனை செய்து கூட பார்க்க முடியாமலுள்ளது என்றும், அச்சமின்றி அனைவரும் தடுப்பூசி எடுக்குமாறு தனது பிரிட்டிஷ் மக்களை வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

“நான் 90 வயதில் அதை எடுக்க முடிந்தால், நீங்கள் அதை எடுக்க முடியும்,” என்று அவர் கூறுகிறார்.

இதுவரை, 800,000 டோஸ் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த மாத இறுதிக்குள் மேலும் நான்கு மில்லியன் தடுப்பூசிகளை நாட்டிற்கு கொண்டு வர பிரிட்டிஷ் அரசு நம்புகிறது.

இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம், அதிக ஆபத்துள்ள குழு முதன்மை இலக்காக மாறியுள்ளது, மேலும் சுகாதார மற்றும் பராமரிப்பு தொழிலாளர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, இந்த வாரம் நாடு முழுவதும் 70 மருத்துவமனைகளில் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.