கிறிஸ்டோபர் நோலனின் லேட்டஸ்ட் ட்ராவல், டெனட்.

கிறிஸ்டோபர் நோலனுடன் “ட்ராவல்” செய்வது எப்படி?

கிறிஸ்டோபர் நோலனின் லேட்டஸ்ட் ட்ராவல், டெனட்.

நீயும் நானும் ஏற்கனவே ஒரு தடவை, ஒரு இடத்தில் மீட் பண்ணோம். இப்போ, அதைத்தாண்டி முன்னால போய்ட்டிருக்கும் நீயும் ஏற்கனவே அங்கே போயிட்டு வந்த நானும்… திரும்பவும் அதே இடத்தில் மீட் பண்ணோம்னா… நமக்குள்ள அந்த இடத்தில் நடந்த ஒரு பஞ்சாயத்தை சுமுகமா தீர்த்துக்கலாம்.

ஆமா நீ யாரு? நான் யாரு?

நீ தான் நான். நான் தான் நீ.

என்னடா கொழப்புற…

அதே… அதே… அதுதான் நம்ம தலைவர் நோலன் ஸ்டைல். அதனால் தான் நோலனுடன், ட்ராவல் செய்வது எப்டின்னு டைட்டில்.
ஆமா… எங்கும் ட்ராவல்… எதிலும் ட்ராவல். அதான் தலைவன் புகுந்து விளையாடுற ஏரியா .

….

ஆமா நீ யாரு? நான் யாரு?

நீ தான் நான். நான் தான் நீ.

மறுபடியுமா?

ஆமா.

கடந்த காலத்தில் இருக்கும் நான் தான் நீ.

நிகழ்காலத்தில் இருக்கும் நீதான் நான்.

சரி…

நிகழ்காலத்தில் இருக்கும் நான்… கடந்தகாலத்துல இருக்கிற உங்கிட்ட வரப்போறேன்.

ரைட்டு… அப்புறம்…

இப்போ ரெண்டு பேருமே ஒரு நிகழ்காலத்தில் இருப்போம். ரைட்டா?.

ஆமா… நம்ம ரெண்டு பேருமே ஒரு நிகழ்காலத்தில் இருப்போம். ஆனா, உண்மையில் அது கடந்தகாலம்.
அந்த கடந்தகாலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை மாத்திட்டோம்னா… அதாவது தடுத்து நிறுத்திட்டோம்னா….
இப்ப ஒரிஜினலா இருக்கிற நிகழ்காலத்தில் நடக்கப்போற ஒரு பேரழிவை தடுக்கலாம்.

இதுதான டைம் ட்ராவல். எல்லா படத்துலயும் இப்டி தான இருக்கும்.

ரைட் ரைட். சரி தான். ஆனா, இந்த டெனட் டைம் ட்ராவல் கொஞ்சம் வேற மாதிரி.

வேற மாதிரின்னா எப்டின்னு… நீங்களே பாத்து தெரிஞ்சுக்குங்கு மக்களே.

பட் கதை பத்தி சின்னதா நான் புரிஞ்சிக்கிட்டதுல இருந்து ஒரு லைன் மட்டும் சொல்றேன்.

எதிர்காலத்தில், பூமி மனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு நிகழ்காலத்தில் வாழ்கிற மனிதர்களால் சீர்கெட்டுப்போகும் என்பதால்…. அந்த சீர்கெட்டுப்போன எதிர்கால பூமியில் வாழப்போகிற எதிர்காலத்தவர்கள்… நிகழ்காலத்தில் பூமியில் வாழ்கிற ஒருவரை வைத்து… பூமியில் வாழ்கிற நிகழ்கால மனிதர்களை அழிக்க நினைக்கிறார்கள், மூன்றாவது உலகப்போர் மூலமாக.

சரி… அப்டி அழிச்சா என்ன ஆகும்? எதிர்காலத்தில் பூமி ரொம்ப கெட்டுப்போகாமல் இருக்கும்… அதாவது எதிர்காலத்தவர்கள் வாழ ஏற்றதாக இருக்கும்.

…..

காலமும் பயணமும்… லவ்வர்ஸ்னா…ரெண்டு பேருக்கும் ப்ரெண்ட்டா இருக்கிற ஒருத்தர் தான் நோலன்.
அதாவது டைம், அண்ட் ட்ராவல்.

இன்செப்ஷனாக இருந்தாலும் இன்டர்ஸ்டெல்லராக இருந்தாலும் டெனட் ஆக இருந்தாலும் காலம்… பயணம் இரண்டும் அல்லது ஏதாச்சும் ஒண்ணாவது இருக்கும்.

நோலனுடன் ட்ராவல் செய்வதற்கு நீங்கள் முதலில் காலத்தைத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

காலத்தையும் வெளியையும் புரிந்துகொள்வதற்கு எதிரான முதல் விசயமாக நான் நினைப்பது, கடவுள் நம்பிக்கை.

கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள், காலமும் வெளியுமாக இருக்கிற இயற்கையையும்… அது பற்றிய அறிவியலையும் நம்ப மறுப்பவர்களாக இருக்கக் கூடும்.

இயற்கையை புரிந்துகொள்ள முற்படுபவர்கள், அது புரியத் தொடங்கும் புள்ளியில் கண்டிப்பாக கடவுளையும் கடவுள் நம்பிக்கையும் தூக்கி டஸ்ட் பின்’னில் போட்டு விடுவார்கள்.

(சிலர் அல்லது பலர் வெளி உலகத்திற்கு தீவிர பக்தர்கள் போல பட்டை, கொட்டை எல்லாம் போட்டுக்கொண்டு நடிக்கலாம். ஆனால், அவர்களின் உள்ளுக்குள் கடவுள் என்ற ஒரு உயிர், அதன் சிந்தனை, அதன் உருவம், அதன் இருத்தல் பற்றிய நம்பிக்கைகள் சல்லியாக சல்லியாக உடைந்திருக்கும்.)

ஆக நோலனுடன் நீங்க ட்ராவல் செய்ய ப்ரியப்பட்டால், காலத்தை புரிந்து கொள்ள வெளிக்கு வருக….

….

டெனட் பார்த்து முடித்த போது நம்ம ஊர் சினிமா உலகம் பற்றிய ஒரு விசயம் நினைவிற்கு வந்தது.

நம்ம ஊரில் சில இயக்குநர்கள், நடிகர்களிடம் கதையே சொல்ல மாட்டார்களாம். நடிக்க வேண்டிய காட்சியை மட்டுமே விளக்குவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது சம்பந்தப்பட்ட காட்சி தொடர்பான முழுப்படத்தின் கதையும் அந்த நடிகருக்குத் தெரியாது. (சில இயக்குநர்கள் தயாரிப்பாளருக்கே கதை சொல்ல மாட்டாங்களாம். அது தனி கதை.)

ஒருவேளை நான், கிறிஸ்டோபர் நோலன் படத்தில் நடிக்கும் ஒரு நடிகராக இருந்தால்… அந்த படத்தின் முழுமையான திரைக்கதை எனக்கு வாசிக்க தரப்பட்டால்… நிச்சயமாக வாசிப்பேன். ஆனால், எதையும் நினைவு வைத்துக்கொள்ள மாட்டேன்.
(ஏன் ட்ரை பண்ணித்தான் பாரேன்…)

ஸ்பாட்டில் டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே செய்யணும்… எந்த டவுட்டும் வரக்கூடாது, வந்தாலும் கேட்கக்கூடாதுன்னு உள்ளுக்குள்ள ஒரு சபதமே செஞ்சிக்குவேன்.

(டவுட்டுங்கிற பேர்ல குண்டக்க மண்டக்க ஏதாவது கேட்டு கண்டிப்பா மொக்க வாங்குவோம். தவிரவும் அதெல்லாம் ஸ்பாட்ல செய்ய வேண்டிய வேலையா… நம்மளும் ஒரு சினிமாக்காரன் தான… அதனால… வாய்க்கு Zipppp.)

நான் மட்டுமில்லாம, நோலன் படத்தில் நடிக்கிறவங்க எல்லாருமே அப்டித்தான் இருந்தாகணும் போல…

நடிக்கிறவங்க மட்டுமில்லாம மொத்த எல்லா டிபார்ட்மென்ட்லயும் ஒர்க் பண்றவங்களும் அப்டித்தான் இருந்தாகணுமோ என்னவோ…

– முருகன் மந்திரம்

Leave A Reply

Your email address will not be published.