முல்லைத்தீவு பல நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களம் ஆரம்பித்து வைப்பு.

பல நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்.

ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தை பல நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களம் ஆரம்பித்து நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பயிற்சித் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பல நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராஜ் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு இன்று(11) மு.ப 11.30மணிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், பல நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர் கட்டளை அதிகாரி பி.ஏ விக்கிரமசிங்க மற்றும் மாவட்ட உதவிப்பணிப்பாளர் மேஜர் விஜயதுங்க, மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி எஸ்.விக்னேஸ்வரன், தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் எஸ்.சிவகௌரி மற்றும் பயிற்சித்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எம் றிஜாஸ், குறித்த திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் பயிற்சித் திட்ட குழுவினருடன் வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பயிற்சி வழங்குவதில் உள்ள சவால்கள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டார்.

மேலும் பயிற்சித்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஏற்படும் தடைகளை ஆதாரத்துடன் எழுத்து வடிவில் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பயிலுநர்களின் கல்விசார் நிலைமை NVQ தகுதி நிலைக்கு குறைவாக இருப்பினும் பயிற்சிகளின் நிறைவில் அவர்களின் தொழில்சார் தரத்தை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுவதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

மாவட்டத்தில் பயிலுநர்களாக பயிற்சி பெறும் துறைகளில் காணப்படுகின்ற ஆளணி வெற்றிடங்கள் தொடர்பாக ஆராய்ந்திருந்தார்.

மேலும் குறித்த விஜயத்தின் போது மாவட்ட செயலகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பல நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்கள அலுவலகத்தையும் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.