நுன் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுடோருக்கு உதவி : அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல்

மக்களின் ஏழ்மை நிலையை பயண்படுத்தி பல்வேறு நுன் நிதி நிறுவனங்கள் பெண்களை ஏமாற்றி நுன் நிதி கடன்களை வழங்கி பெண்களை தற்கொலைக்கும் தள்ளிய சந்தர்ப்பங்கள் காணப்பட்டது. எனவே அவற்றை எல்லாம் தீர்க்கும் முகமாக கௌரவமாக நீங்கள் நிதியை பெற்று அதன் மூலம் உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள சமூர்த்தி வங்கியின் செயல்பாடு உங்களுக்கு துணையாக இருக்கும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சமூர்த்தி வங்கியின் செயற்பாடுகள் கணணி மயப்படுத்தப்பட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(15) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்கள் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

சமூர்த்தி என்பது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கான செயல் திட்டமாக காணப்படுகின்றது. அந்த செயல் திட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் சுமார் 24 ஆயிரம் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூர்த்தி பயணாளிகள் உள்ளனர். இவர்களுக்கு மாதாந்தம் 40 மில்லியன் ரூபாய் நிதி சென்று கொண்டிருக்கின்றது. மாவட்டத்தில் அதி கூடிய நிதி தொகையை கொண்ட திணைக்களமாக சமூர்த்தி திணைக்களம் காணப்படுகின்றது.

சமூர்த்தி பணத்தை பெற்றுக் கொள்ள மக்களாகிய நீங்கள் எவ்வளவு நாற்கள் அழைந்து கொண்டு காத்து இருந்திருப்பீர்கள் என்று தெரியும்.ஆனால் இனி அந்த கஸ்டம் உங்களுக்கு இல்லை. -கணணி மயப்படுத்தலின் மூலம் ஐந்து நாட்கள் எடுக்கப்பட்ட கால வரையாரை இனி ஐந்து நிமிடத்தில் முடிவடையக் கூடியதாக இருக்கும். சில தினங்களில் பின்னர் இலகுவாக நீங்கள் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.நுன் நிதிக்கடன் எமது மாவட்டத்தில் எவ்வளவு பாதீப்பை ஏற்படுத்தி உள்ளது என்று அனைவருக்கும் நன்று தெரியும். -பல்வேறு நுன் நிதி நிறுவனங்கள் மக்களின் ஏழ்மை நிலையை பயண்படுத்தி பெண்களை ஏமாற்றி நுன் நிதி கடன்களை வழங்கி பெண்களை தற்கொலைக்கும் தள்ளிய சந்தர்ப்பங்கள் உள்ளது.

எனவே அவற்றை எல்லாம் தீர்க்கும் முகமாக கௌரவமாக நீங்கள் இங்கு நிதியை பெற்று அதன் மூலம் நீங்கள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள சமூர்த்தி வங்கியின் செயல்பாடு உங்களுக்கு துணையாக உள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள 9 சமூர்த்தி வங்கியில் முதலாவது கணணி மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் குறித்த வங்கியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.