தம்மிக தேனை முதலில் பரிசோதித்த வத்துபிட்டிவல மருத்துவமனையின் மருத்துவர் உட்பட 10 பேருக்கு கொரோனா

வத்துபிட்டிவல  மாவட்ட அடிப்படை மருத்துவமனையின் ஊழியர்களில் 10 பேர் உட்பட , ஒரு மருத்துவர் , கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலையின் இயக்குனர் மருத்துவர் சீ.என். பண்டார தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் உள்ளோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவருக்கும் ,அங்கு பணியாற்றும் 4 ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், இதற்கு முன்பு செய்யப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இரண்டு செவிலியர்கள் மற்றும் இரண்டு துப்புரவு ஊழியர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதற்கிடையில், கேகல்லேவைச் சேர்ந்த தம்மிக பண்டார என்ற நபர் முதலில் கொரோனாவுக்கு தயாரிக்கப்பட்ட தேனை மலையக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்திருந்தார் என தெரிவித்திருந்தார்.

அவர் பேசும்போது நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளதாக தம்மிக பண்டார தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இதுபோன்ற ஒரு பரிசோதனை குறித்து தனக்குத் தெரியாது என்று மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.