பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் யார்? வியூகம் வகுக்கும் விஜய் டிவி !

தமிழ் சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு டிராமாக்களும் டிவிஸ்டுகளும் அதிகமாக நிறைந்த ரியாலிடி ஷோவாக கருதப்படுகிறது பிக் பாஸ். தற்போது விஜய் டிவியில் நடைபெற்று வருகிறது.

ஆரம்பத்தில் கெட்டவர்கள் போல் காட்டப்பட்ட சிலர் தற்போது விஜய் டிவியால் வேண்டுமென்றே நல்லவர்கள் போன்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் தலைக்கணத்துடன் இருந்த பாலாவை கமலஹாசன் திட்டி மாற்றுவது போல் காட்சி அமைக்கப்பட்டது.

அதேபோல் அன்பான குடும்பமாக இருந்த அர்ச்சனா தற்போது தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வில்லியாக மாறிவிட்டார். இவர் வந்தால் ஜாலியாக இருப்பார் என கூறி நிஷாவின் ஜோலியை முடித்துவிட்டார்கள் விஜய் டிவியினர்.

முதலில் கெட்டவராக காட்டப்பட்ட சனம் ஷெட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சமயத்தில் திடீரென வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் விஜய் டிவி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுவது என்னவென்றால் முதலில் நடிகர் ஆரி தான் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என பேசிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அவர்களின் பார்வை பாலா பக்கம் திரும்பியுள்ளதாம்.

aari-biggboss

இதனால் வருகின்ற சில வாரங்களில் நடிகர் ஆரி மீது கொஞ்சம் வில்லத்தனம் கலந்த பார்வையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேலை செய்து வருகிறார்களாம். இதனால் பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் பாலா என்பது உறுதிதான் என்கிறார்கள்.

biggboss-bala

ஆரி மற்றும் பாலாவை இறுதி வரை கொண்டு சென்று இறுதியில் வென்று பாலா பட்டம் வெல்வதுபோல தற்போதைக்கு கதை எழுதி வைத்திருக்கிறார்களாம் விஜய் டிவியினர். வரும் வாரங்களில் யாருக்கு மக்கள் சப்போர்ட் அதிகமாக இருக்கிறதோ அதற்கு தகுந்தபடி ஸ்கிரிப்ட் மாறிவிடுமாம்.

Leave A Reply

Your email address will not be published.