இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படும்

கொவிட் -19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை மீள திறப்பதற்கான அனுமதியை கலாசார அலுவல்கள் அமைச்சு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழங்கியுள்ளது.

இதற்கிணங்க இன்று முதல் திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார தரப்பினரின் வழிகாட்டல்களுக்கமைய உரிய ஆலோசனைகளை பின்பற்றி திரையரங்குகளை மீள திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 14 ஆம் திகதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.