இனவாதிகளின் ஆதரவின்றி நாடாளுமன்ற நிலையான ஆட்சிக்கு சிங்கள மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் – பிவித்துரு ஹல உறுமய கருத்து

அமைய இருக்கின்ற புதிய பாராளுமன்றத்தில் பொதுஜன முன்னணி நிலையான அரசை அமைக்க வேண்டுமாயின் பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஆதரவு அவசியமென பிவித்துரு ஹல உறுமயவின் உப தலைவர் மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அடிப்படைவாதிகள், இனவாதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளினுடைய ஆதரவில்லாமல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சியமைப்பதற்கான ஆதரவினை சிங்கள மக்களிடம் எதிர்பார்ப்பதாக மதுமாதவ சுட்டிக்காட்டினார்.

இனவாதிகளும், அடிப்படைவாத கருத்துக்களை கொண்ட பிரதிநிதிகளின் சுயநல செயற்பாடுகளினாலேயே கடந்த கால ஆட்சியின் போது ஒட்டு மொத்த மக்களும் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கருணா அம்மான் கூறிய கருத்து முற்றிலும் தவறானதென தெரிவித்த மதுமாதவ அரவிந்த, மதத்தலைவர்களை அவமதிக்கும் விதத்தில் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல்வாதிகள் முன்னெடுப்பதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.