கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு முதல் 18 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பு 13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் இன்று இரவு 10.00 மணி முதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் இன்று இரவு 10 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை 18 மணித்தியாலங்களாக நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அத்துடன் கொழும்பு 01, 11, 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் நடைபெறவுள்ளதாகவும் சபை மேலும் தெரிவித்துள்ளது.

திருத்தப்பணிகள் காரணமாக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Comments are closed.