வேலை இல்லா திண்டாட்டம் அறவே ஒழிய வேண்டும்-கமல்ஹாசன்

தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் அறவே ஒழிய வேண்டும் என காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்தார். செழுமை கோடு தான் மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம் எனவும் கூறினார். பெண் சக்தி அதாவது குடும்ப தலைவிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என கூறினார். வறுமைக்கோடு என்ற வார்த்தைக்கு அளவுகோடு வைப்பதே எங்கள் நோக்கம் என கூறினார்.  தமிழக சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரத்தை தென் தமிழ்நாட்டில் கமல்ஹாசன் ஏற்கனவே மேற்கொண்டிருந்தார்.

திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இந்த பிரசாரத்தை கமல்ஹாசன் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரசாரத்தின் போது, எம்ஜிஆரின் நீட்சி தாம் என்று கமல்ஹாசன் பிரசாரம் செய்தது பெரும் சர்ச்சையானது. இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு கமல்ஹாசனும் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று முதல் 22-ந் தேதி வரை 2-ம் கட்ட பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்கி நடத்தி வருகிறார்.

கமல்ஹாசன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சூறாவளிப் பிரசாரம் செய்து வருகிறார். இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; பெண் சக்தி என்ற திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ஊதியம் வழங்கப்படும். நேர்மையான துரித நிர்வாகம், நவீன தற்சார்பு கிராமங்கள் உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. தமிழகத்தை சீரமைப்போம் என்ற கொள்கையில் 7 அம்ச திட்டங்கள் உள்ளன. வறுமை கோட்டை செழுமை கோடாக மாற்றுவதே மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம். தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் அறவே ஒழிய வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.