காங்கேசன்துறை துறைமுகத்தை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை : அமைச்சர் ரோஹித

வரலாற்று பெருமைமிக்க யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர்.

இந்த விஜயத்தின்போது காங்கேசன்துறை – காரைக்கால் இடையேயான கப்பல் சேவை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டது.

அதேவேளை, அடிப்படை வேலைகளை முடித்துக் கொண்டு விரைவில் துறைமுகம் திறக்கப்படும் என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இதன்போது தெரிவித்தார்.

இந்த அபிவிருத்தித் திட்டமானது 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.