நடிகர் அனில் பி நெடுமங்காடு மறைவுக்கு கேரளா இரங்கல் தெரிவித்துள்ளது

மலையாள நடிகர் அனில் நெடுமங்காடு தனது 48வது வயதில், மலங்கரா அணைத் தளத்தில், நீரில் மூழ்கி இறந்த தகவல் மலையாள திரைப்பட ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியூட்ட செய்துள்ளது.

நடிகர் அனில் பி நெடுமங்காடு கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் முவாட்டுபுழாவில் உள்ள அணைத் தளத்தில் குளிக்கும் போது இந்த விபத்து மரணம் நிகழ்ந்தது. ஆரம்ப அறிக்கையின்படி, வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் மலங்கர அணையில் நீரில் மூழ்கி அனில் உயிர் இழந்தார் என்று இடுக்கி போலீசார் தெரிவித்தனர். அவர் தனது நண்பர்களுடன் அந்த பகுதிக்குச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவர் இறந்து விட்டார்.

திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட அனில், ராஜீவ் ரவியின் கம்மட்டிபடத்தில் வில்லனாகவும், சச்சியின் அய்யப்பனம் கோஷியத்தில் காவல்துறை அதிகாரியாகவும் வியர்ப்பூட்டும் நடிப்பால் மக்கள் வரவேற்பை பெற்றவர். தொலைக்காட்சி மூலம் .

’அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத் இயக்குனர் கே.ஆர்.சச்சிதந்தன், இந்த ஆண்டு ஜூன் மாதம் காலமாகியிருந்தார். தற்செயலாக, இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஆர்.சச்சிதந்தன் பெயரில் ஒரு முகநூல் பதிவை பகிர்ந்திருந்தார். அது இவ்வாறாக இருந்தது. “இந்த நாள் அவரைப் பற்றியது, நான் எழுத வேண்டும், ஆனால் எதையும் எழுத இயலவில்லை. நான் இறக்கும் வரை நீங்கள் என் முகநூல் கவர் புகைப்படத்தில் இருப்பீர்கள்” என்று நினைவு கூர்ந்திருந்தார்.

தனது புதிய திரைப்படமான ’அமைதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக தொடுபுழாவில் இருந்த அனில், இடைவேளையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது

நடிகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் பினராயி விஜயன், குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களை சித்தரிப்பதன் மூலம், அனில் நெடுமங்காடு மலையாள படங்களில் தனது முக்கிய இடத்தை நிறுவியுள்ளார். தனது நடிப்பு வலிமையால், திரைப்பட பார்வையாளர்களிடையே ஒரு அழியாத அடையாளத்தை வைத்திருக்கிறார் என்று முதல்வர் பினராயி விஜயன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.