கல்முனையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சை…!!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய வறுமையற்ற இலங்கையை உருவாக்குதல் எனும் பிரதான தொனிப்பெருளின் அடிப்படையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலக பிரிவில் இரண்டாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 20 விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை இன்று (27) பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம் அபூல்ஹசனின் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நேர்முக தேர்வில் பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்
எம் ரம்சான்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா, நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல் பதுருத்தீன் ஆகியோர் கலந்து கொண்டு நேர்முக தேர்வுகளை மேற்கொண்டனர்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மிகக் குறைந்த கல்வித் தகைமையுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அரச தொழிலை பெற்றுக்கொடுத்து அக்குடும்பங்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாகவே இந் நேர்முக தேர்வுகள் இடம்பெற்று அதில் தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் “பல்நோக்கு அபிவிருத்தி பணி உதவியாளர்களாக” நியமனம் வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

– Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.