சீக்கிரம் திரும்பி வா சூர்யா, அன்புடன் தேவா.. : ட்வீட் மம்முட்டி

‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட 8 பேருக்கு திடீரென கொரோனா ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியோடு நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக ரஜினியும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

மேலும் கொரோனா டெஸ்ட் நெகட்டிவ் என்று வந்த போதிலும், ரஜினி ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் ரஜினி இருக்க வேண்டும் எனவும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆகையால் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியானவுடன் பல்வேறு அரசியல் தலைவர்கள் ரஜினியின் உடல் நலத்தை பற்றி அவரிடம் விசாரித்தனர். அதோடு திரையுலக பிரபலங்கள் பலர், ரஜினி பூரண குணமடைய சமூகவலைத்தளங்களின் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மலையாள மெகா ஸ்டாரான மம்முட்டி, ரஜினிக்காக போட்டுள்ள நெகிழ்ச்சியான ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த ட்வீட்டில் ‘விரைவில் நலம் பெறுங்கள் சூர்யா, அன்புடன் தேவா’ என்று பதிவிட்டு இருக்கிறார் மம்முட்டி.

முதன்முறையாக தாய்மொழியில் நடிக்கும் ரஜினி - 'சூர்யா - தேவா' ரிட்டர்ன்ஸ்! | Rajinikanth first time in his mother tongue - Tamil Filmibeat

அதாவது மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி இணைந்து ‘தளபதி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் ரஜினியும், தேவா என்ற கதாபாத்திரத்தில் மம்முட்டியும் நெருங்கிய நண்பர்களாக நடித்ததோடு, படத்தை மெகா ஹிட் ஆக்கினர்.

அந்தப் படத்தை தற்போது முன்வைத்து ரஜினிக்கு மம்முட்டி வாழ்த்து தெரிவித்திருப்பதால், ரசிகர்கள் பலர் இந்த ட்வீட்டை பார்த்து கண்கலங்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.