பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியதால் கைது.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் (சிஐடி)கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி  கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட ரீதியில் அறுவடை செய்யப்படும் நெல்லினை அவ்வந்த மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலைகளிற்கு வழங்கி, அரிசியாக சதொச உள்ளிட்ட நிறுவனங்களிற்கு விற்பனை செய்யும் நடைமுறை காணப்படும் நிலையில், கிலோ ஒன்றுக்கு 3 ரூபா பணத்தினை தரகர் கூலியாக பெற்று (இலஞ்சமாக) வெளி மாவட்ட அரிசி ஆலைகளிற்கு விற்பனை செய்வதாக அமைச்சருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.