வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளியை அழைத்து வந்த தாதிக்கு கொரோனா.

வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளியை அழைத்து வந்த தாதிக்கு கொரோனா தொற்று.

பதவியா வைத்தியசாலையில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் நோயாளி ஒருவரை அழைத்து வந்த தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதவியா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி ஒருவருக்கு கடந்த வியாழக்கிழமை பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுருந்தது.

அதன் முடிவுகள் வராத நிலையில் இன்று பகல் பதவியா வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டியில் நோயாளர் ஒருவரை குறித்த தாதி அழைத்து வந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் குறித்த நோயாளி அனுமதிக்கப்பட்டு பின்னர் நோயாளர் விடுதி 4 இற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை வெளியாகிய பிசீஆர் பரிசோதனை முடிவில் பதவியாவில் இருந்து நோயாளியை அழைத்து வந்த குறித்த தாதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பதவியா வைத்தியசாலையில் பலரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையின் சில பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா வைத்தியசாலையின் சில பகுதிகளும் தற்காலிகமாக மூட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பதவியாவில் இருந்து வருகை தந்த நோயாளி மற்றும் தாதி ஆகியோருடன் தொடர்புகளை பேணியவர்களையும் தனிமைப்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.