சுவிஸ் சொலத்தூண் மாநில தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களின் செய்தி

2021 மார்ச் 7ஆம் திகதி நடைபெற்றவுள்ள சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் மாநில மாகாணசபைக்கான தேர்தலுக்காக அம் மாநில தமிழ் மக்களின் ஒத்துழைப்பை சொலத்தூண் மாநில சபை தமிழ் வேட்பாளர்கள் கோரியுள்ளனர்.

இந்த மாநில அரசு 100 மாநில ஆட்சியாளர்களை கொண்ட சபையாகும்.

இம் முறையும் அனைத்துக் கட்சிகளும் தமது வேட்பாளர்களை ஜனநாயக முறையில் தெரிவு செய்துள்ளனர்.

சொலத்தூணில் 5 பிரதேசபிரிவுகள் உள்ளன. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் உரிமை அந்தந்தப் பிரதேசப்பிரிவில் வசிக்கும் வாக்குரிமை பெற்றவர்களிற்கே உரித்தாகும்.

இவ்வகையான தேர்தல் முறைமையினால் இந்த மாநிலத்தில் வசிக்கும் அனைத்து பிரதேச மக்களின் பிரநிதித்துவங்களும் உறுதிசெய்யப்படுகின்றது.

நீண்டகாலமாக சுவிற்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் ,அதாவது சுவிற்சர்லாந்து பிரஜா உரிமை எடுக்காதவர்கள் இந்த நாட்டில் வரியை செலுத்தியும், இங்குள்ள சமூக நிறுவனளிலும் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

இந்த அடிப்படையில் இவர்கள் குறைந்தபட்சம் தாம் வாழும் மாநிலங்களில் அல்லது கிராமசபையில் வாக்களிக்கும் அரசியல் உரிமை வழங்கப்பட வேண்டும்.

இதனடிப்படையில் முன்வைக்கபட்ட கோரிக்கை இவ்வருடம் சொலத்துாண் மாகாண சபையினால் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் பல பிரஞ்சு மொழி பேசும் கன்ரோன்களில் வெளிநாட்டவர்களிற்கான வாக்குரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சொலத்தூண் மாநில சபைக்கான தேர்தலில் மூன்று வேறுபட்ட பிரதேச பிரிவில் போட்டியிடுகின்றனர். இம்முறை ஒரு தமிழ் பேசும்பெண் முதல்முறையாக போட்டியிடுவது குறிப்பிடதக்கது.

சொலத்தூண் வாழும் சுவிற்சர்லாந்து பிரஜா உரிமை பெற்ற வாக்காளர்கள் தேர்தலில் கலந்து கொள்ளும் வேட்பாளர்களை உற்சாகப்படுத்தியும், நண்பர்கள் உறவினர்களிடம் பிரச்சாரப்படுத்தி ஒரு தமிழ் பிரதிநிதியை அனைத்து குடியேறிகள் சார்பில் மாநில சபையில் அங்கத்துவம் வகிக்க வழிசெய்யுங்கள்.

இம்முறை குடியேறிகள் சார்பில் 130 வேட்பாளர்கள் போட்டி போடுகின்றனர்.

நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான் தங்கள் வீட்டிக்கு தபால் மூலம் கிடைக்க பெற்ற வாக்காளர் அட்டையில் SP-சோசலிச ஜனநாயக கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கு லிஸ்டில் ஒருதரம் அவ்வேட்பாளரின் பெயர் அச்சிடப்பட்டிருக்கும் மேலும் அதே லிஸ்ட்டில் அச்சிடப்பட்ட ஏனைய வேட்பாளரின் பெயரை குறுக்காக கோடிட்டு அதற்கு மேல் உங்களது தமிழ் வேட்பாளரின் பெயரை எழுதினால் உங்கள் மூலம் இரண்டு வாக்குகள் கிடைக்கப்படும்.

ஆதலால் குறிப்பிட்ட வேட்பாளர் வெற்றி அடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். நாம் வாழும் பிரதேசங்களில் எம்மை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் ஓர் மாகணசபை உறுப்பினர் இருப்பது சிறுபான்மையாக வாழும் மக்களின் தேவைகளையும் அரசியல் அதிகாரங்களையும் பெற்று கொள்ள முடியும்.

மேலதிக விபரங்கன் தேவைப்பட்டால் குறிப்பிட்ட வேட்பாளருடன் தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம். கோவிட் காலப்பகுதியாதலால் நேரடியாக சந்திக்க முடியாவிட்டாலும் தொலைபேசி சமீகத்தளங்கள் மூலமாக நீங்கள் விரும்பிய வேட்பாளரிற்கான பிரச்சாரங்களை செய்து வாக்களிக்காத பலரும் இவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்தற்காக ஊக்குவிக்க முடியும் என அப்பகுதியிலுள்ள மாநில சபை உறுப்பினர்கள் வேண்டியுள்ளனர்.

மாநில சபை தமிழ் வேட்பாளர்கள் :

 

Leave A Reply

Your email address will not be published.