தீயணைப்பு கருவிகளின் கையாளுகை தொடர்பா தெளிவூட்டல்!

தீயணைப்பு கருவிகளின் கையாளுகை தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல்!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் கட்டடத் தொகுதியில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பு கருவிகளினை அனர்த்த காலங்களில் உடனடியாக களத்தில் எல்லோரும் பயன்படுத்துதல் மற்றும் குறித்த கருவிகளின் பயன்பாடுகள் தொடர்பாக செயன்முறைரீதியாக விழிப்புணர்வூட்டும் குறுகிய நேர பயிற்சிப்பட்டறை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மதியம் 12.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தீயணைப்பு கருவிகளின் பயன்பாடுகள் தொடர்பாக தெளிவூட்டும் வகையில் சகல விடயங்களையும் உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்ட கையேடு வழங்கப்பட்டு, மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளரும், உற்பத்தித்திறன் மேம்பாட்டுப் பிரிவின் பிரதம இணைப்பாளருமாகிய K.லிங்கேஸ்வரன்அவர்களால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த கருவிகள் அலுவலக வளாகத்தில் காட்சிப்படுத்தல் மட்டுமன்றி அனைவரும் கையாளத்தெரிந்திருக்க வேண்டும். அதனூடாக அனர்த்தங்களின் அழிவுகளை கட்டுப்படுத்தமுடியும். புதிதாக நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு இத்தகைய பயிற்சிகள் பயன்பாடுகளை கொடுக்கம் என தெரிவித்தார்.

அதன் பின்னர் நீரினால் நிரப்பப்பட்டுள்ள சிவப்பு நிற மற்றும் காபனீரொட்சைட்டினால் நிரப்பப்பட்டுள்ள கறுப்பு நிற தீயணைப்பு கொள்கலன்களை கையாளுகின்ற முறைமை தொடர்பாக செயன்முறைரீதியாக விளக்கமளிக்கப்பட்டு உத்தியோகத்தர்களும் கைளாளுவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டு தெளிவூட்டப்பட்டுள்ளது.

இச் செயலமர்வில் மேலதிக அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைக்கலைவர்கள், உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.