ஹக்கீமுக்கு கொரோனா மேலும் 15 உறுப்பினர்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பாராளுமன்றத்தில் மேலும் 15 உறுப்பினர்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

எம்.ஏ. சுமந்திரன் ,தலதா அத்துகோரள , சாணக்கியன் , கயந்த கருணாதிலக்க , பைசல் காசிம் ,எம்.எம்.ஹாரீஸ் ,ஹாபிஸ் நஷீர் உட்பட்ட 15 எம் பிக்களும் , நாடாளுமன்றத்தின் இரண்டு ஊழியர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் நாடாளுமன்ற செயலாளர் குமாரசிறி ஹெட்டிகேயும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.