ஒன்லைனில் கொரோனா தடுப்பூசி வாங்கவேண்டாமென எச்சரிக்கை : சுவிட்சர்லாந்து

ஒன்லைனில் கொரோனா தடுப்பூசி வாங்கவேண்டாமென எச்சரிக்கை விடுக்கும் சுவிட்சர்லாந்து!

ஒன்லைனில் போலி தடுப்பூசிகள் விற்கப்படுவதால், ஒன்லைனில் கொரோனா தடுப்பூசி ஆர்டர் செய்யவேண்டாம் என சுவிஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

தடுப்பூசிகள் எனப்படுபவை, மருத்துவ ஊழியர் ஒருவரால் ஆயத்தம் செய்யப்பட்டு செலுத்தப்படும் திரவங்கள். அவை சரியான வெப்பநிலையில் பாதுக்கக்கப்படவேண்டும், வெப்பநிலை மாறாத வகையில் வாகனங்களில் அனுப்பப்படவேண்டும்.

ஆகவே, தடுப்பூசிகளை ஒன்லைனில் விற்பது சாத்தியமில்லை என சுவிஸ் மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.

இனையத்தில் ஏற்கனவே போலி கொரோனா தடுப்பூசிகள் உலாவரத்தொடங்கிவிட்டதாக தெரிவிக்கும் அந்த அமைப்பு, ஒன்லைனில் தடுப்பூசி வாங்குவது தொடர்பாக எச்சரித்துள்ளது.
கொரோனா தடுப்புசியின் தேவை அதிகரித்து வருவதை சதகமாக்கிக்கொண்டு, குற்றவாளிகள் மற்றும் சில அமைப்புகள் போலியான கொரோனா தடுப்பூசியை விளம்பரம் செய்துவருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்படி விற்கப்படும் தடுப்பூசிகள் பொதுவாக போலியானவையாகத்தான் உள்ளன. ஆகவே, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர் தங்கள் மருத்துவரையோ அல்லது அதிகாரப்பூர்வ தடுப்பூசி மையத்தையோ மட்டுமே அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.