அன்று எம்மை தேசத் துரோகிகள் என விமர்சித்தவர்கள் இன்று வசமாகப் பொறியில் சிக்கிக்கொண்டுள்ளார்கள் – மங்கள சுட்டிக்காட்டு

இலங்கையை அபிவிருத்தியின் பக்கம் திருப்ப வேண்டும் என்றால், அதில் சர்வதேச முதலீட்டாளர்களை இணைந்துக்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும் என்றும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தியில் சர்வதேச முதலீட்டாளர்களை இணைத்துக்கொள்ள அரசு முன்னெடுத்துள்ள தீர்மானம் ஆரோக்கியமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் தாம் ஆட்சியில் இருக்கும்போது, இலங்கையின் அபிவிருத்திக்கு சர்வதேச முதலீட்டாளர்களை இணைத்துக்கொள்ள முயற்சிக்கையில் நாட்டைக் காட்டிக்கொடுக்கும், விற்பனை செய்யும், தேசத் துரோகச் செயல் எனப் பிரசாரம் செய்தவர்கள் இன்று சிக்கிக்கொண்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் அப்போது கூறிய பொய்களின் காரணமாக, இன்று நல்ல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும்போது, பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஆரம்பம் முதலே நட்டத்தில் இயங்கிய ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், குறுகிய காலத்தில் இலாபத்தை அடைந்துகொண்டது சர்வதேச முதலீட்டாளர்களுடன் கைகோர்த்ததால்தான் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.