முகங்கவசங்கள் அணியாத 1441 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

பொது இடங்களில் முகக்கவசங்கள் அணியாது நடமாடிய 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் முற்றுப்பெற்றுள்ளதாக அனேகமானோர் முகக்கவசம் அணியாது சுதந்திரமாக அலைந்து திரிவதனை கட்டுப்படுத்துமுகமாகவே இவ்வாறான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முகக்கவசங்கள் அணியாது பொது இடங்களில் சுற்றித்திரிவோர் தொடர்ந்து இவ்வாறு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments are closed.