வவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரணா தொற்று.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் கடந்த இரு வாரத்தில் மாத்திரம் 211 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் இன்று (19.01) காலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனையில் 20 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் இரவு 8 மணியளவில் வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் 25 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றையதினம் மாத்திரம் 45 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிக்குளம்,நொச்சிமோட்டை,கந்தபுரம் பட்டானிச்சூர் பகுதிகளை சேர்ந்த 45 நபர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்குள் 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.