முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச ஒளிரும் வாழ்வு அலுவலக திறப்புவிழா.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச ஒளிரும் வாழ்வு அலுவலக திறப்புவிழா.

முழுமையாக மாற்றுத்திறனாளிகள் நிறுவனமாக இயங்கி வருகின்ற ஒளிரும் வாழ்வு அமைப்பானது இன்று தங்களது புதிய அலுவலகதத்தினை ஒட்டுசுட்டான் 14ம் கட்டை பகுதியில் 20.01.2021 காலை 10.00 மணிக்கு அன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அலுவலக கட்டிடத்தின் நாடவை ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலர் இ.ரமேஷ் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

இவ் அமைப்பினரின் கீழ் இயங்குகின்ற சுய உதவிக் குழு அங்கத்தவர்கள் ஒன்பது நபர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சிறுவர் நிதியம் அனுசரனையுடன் வவுனியா ஓஹான் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ரூபா ஐம்பதாயிரம் படி 450000.00 (நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம்) வழங்கி வைக்கப்பட்டது.

சிறுவர் நிதியம் கடந்த ஆண்டு 2020 இலங்கையில் இருந்து சென்ற காரணத்தால் அதில் பணியாற்றிய ஊழியர்கள் தொண்டர்கள் கெளரவிக்கப்பட்டதோடு சிறப்பாக இயங்கி வருகின்ற சுய உதவிக் குழுக்களின் அங்கத்தவர்களும் கெளரவவிக்கப்பட்டனர்.

அத்துடன் இவ் மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகள் கடந்த ஆண்டு ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் 100 புள்ளிகள் பெற்றவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் சமூக சேவை உத்தியோகத்தர் ச.சுதாகரன் மற்றும் கெளரவ விருந்தினர்களாக ஒட்டுசுட்டான் கிராம அலுவலர் திருமதி.நி.லலிதா திருமதி.இ.தர்சினி சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.