யாழ். பல்கலை மாணவிக்குக் கொரோனா! – பூநகரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்குத் தொற்று

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொரோானா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கற்பதற்காகப் பதுளையிலிருந்து வந்து நல்லூரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முகாமைத்துவபீட மாணவிக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பிலிருந்து வந்து பூநகரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.