கேரளாவில் ஒரு மாணவனை சுற்றி வளைத்து தாக்கிய மாணவர்கள் (வீடியோ)

கேரளா கொச்சி, களமச்சேரி என்ற காலனியை சேர்ந்த 17 வயது நண்பர்களுக்குள் நடந்த சண்டையில் ஏழுபேர் சேர்ந்து தங்களது கூட்டத்தில் இருந்த நண்பனை கடந்த வியாழக்கிழமை சுற்றி வளைத்து தாக்கியதில் சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாக்கிய இளைஞர்கள் தாங்கள் தாக்கும் போது எடுத்த காணொளியை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்ததுடன் தாக்கப்பட்ட இளைஞனை வீட்டிலும் கொண்டு சேர்த்துள்ளனர்.

இளைஞனின் நிலையை கண்ட பெற்றோர் காவல்த்துறைக்கு அறிவித்துள்ளனர். போலிஸ் 17 வயதையொட்டிய இளைஞர்களை காவல்நிலையத்துக்கு வருவித்து விசாரித்துள்ளனர். அவர்களில் ஒரு இளைஞன் பயந்து அவமானத்திற்கு உள்ளான நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பரவலான காணொளியை கண்ட பெற்றோர் தாக்கிய இளைஞர்களது வீடுகளை சுற்றி வளைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு , அவர்களது வயது 18 ஆகாததால் சம்பந்தப்பட்ட சிறுவர்களை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப முடிவு எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நண்பர்களின் குழுவில் இருந்த இருவர் கஞ்சா பாவிப்பதை அவர்களுடைய வீட்டுக்கு தெரிவித்ததால் தான் தான் தாக்கப் பட்டதாக தாக்கப்பட்ட மாணவன் கூறியுள்ளான். தங்கள் சகோதரியை தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் காதலித்ததால்தான் தாக்கினோம் என தாக்கிய மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞர்கள் 12 ஆம் வகுப்பில் கல்வி கற்போர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்கும் வீடியோ :

Leave A Reply

Your email address will not be published.