வடக்கில் இன்று 18 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி!

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் வடக்கில் 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 362 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வவுனியாவைச் சேரந்த ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 319 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மன்னாரைச் சேர்ந்த 15 பேருக்கும், யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த 02 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.