லண்டனில் தமிழ் சிறுமி கொலை! தாயார் தற்கொலை முயற்சி!

லண்டன் மிச்சம் பகுதியில் நான்கு வயதுச் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். தயார் காயங்களுக்கு உள்ளாகி உள்ளார். நேற்று மாலை லண்டன் மிச்சம் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தை அடுத்து காயப்பட்ட இருவரும் ஏயர் அம்புலன்ஸில் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்ட போதும் நான்கு வயது மகள் உயிரிழந்துவிட்டார்.

இது பற்றி தகவல் அளித்த ஸ்கொட்லன்ட் யாட் இக்கொலை தொடர்பாக தாங்கள் வேறு யாரையும் தேடவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி தாயாரையே கொலைக்குக் காரணம் எனக் கருதுகின்றனர்.

சில வாரங்களுக்கு முன் லண்டன் இல்பேர்ட் பகுதியில் இரு குழுந்தைகளைக் கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. லண்டனில் தயார் பிள்ளைகளைக் கொலை செய்து தன்னையும் தற்கொலை செய்ய முயற்சித்த இரு சம்பவங்கள் லண்டன் தமிழ் சமூகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.