விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம், 24 பேர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முற்படுகின்றனர் என்று குற்றம்சாட்டி பயங்கரவாத விசாரணை பிரிவினரால் (ரிஐடி) வடக்கு மாகாணத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சத்தம் சந்தடியின்றி ரிஜடியினர் இந்த கைது வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு இன்னும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 7 பேரும் முல்லைத்தீவில் நேற்று ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களோடு இன்னும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவிக்கையில், “எமக்கு 12 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப் பெற்றது. கிளிநொச்சியில் இருந்து 12 முறைப்பாடுகளும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு முறைப்பாடு கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் சிலர் கிளிநொச்சியில் உள்ள ரிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை நாம் நேரில் சென்று பார்வையிட்டோம். சிலர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள்.” – என்றார்.

Comments are closed.