பிரான்சில் தற்போது தடுப்பூசிகள் வேகமாக வழங்கப்படவுள்ளது.

பிரான்சுக்குள் மீண்டும் துரித வேகத்தில் தடுப்பூசிகள்!

இதுவரை பிற்போடப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசிகள் தற்போது வேகமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல் து பிரான்சுக்கான l’Agence régionale de santé நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 15.000 இல் இருந்து 20.000 முன்பதிவுகள் இதுவரை பிற்போடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு தட்டுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாக நேற்று திங்கட்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதத்தில் 200.000 வரையான தடுப்பூசிகள் இல் து பிரான்சுக்குள் போடப்படும்!எனவும்,இதில் முதல்கட்டமாக பெப்ரவரி 8 ஆம் திகதிக்குள் முன்பதிவு செய்திருந்த 20.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும்!எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.